உடலுக்கு ஏ.சி. எப்போதும் ஏற்றதில்லை
கோடைகாலத்தில் வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள ஏ.சி. வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. எனினும் ஏ.சி. பயன்பாடு சருமத்திற்கு தீங்கும் விளைவிக்கும்.
ஏ.சி.யின் பயன்பாடு அதிகரிக்கும்போது அது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். இதனால் சருமம் வறட்சி அடையும். உதடுகளும் உலர்ந்து போய் விடும். ஏனெனில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ஏ.சி.யில் இருந்து வெளிப்படும் செயற்கை குளிர் பெரும்பாலானவர்களின் சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாது. அதிலிருந்து தற்காத்து கொள்ள அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். உதடுகள் வறட்சி அடைவதை தவிர்க்க அதற்குரிய கிரீம்களை பயன் படுத்த வேண்டும்.
ஏ.சி.யில் இருப்பவர்கள் அறையின் வெப்பநிலையை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அறையில் குளிர்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காக ஏ.சி. மூலம் நிர்வகிக்கும் வெப்ப நிலை 22 சென்டிகிரேட்டுக்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மிதமான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சரும பாதிப்பின் தன்மை அதிகரிப்பது தவிர்க்கமுடியாததாகிவிடும். ஒருசிலருக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் கூட ஏற்படலாம்.
ஏ.சி.யில் இருக்கும் பில்டரையும் அவ்வப்போது சுத்தப்படுத்திவர வேண்டும். ஒருசிலர் ஆண்டுக்கணக்கில் பில்டரை சுத்தப்படுத்தாமல் வைத்திருப்பார்கள். அதில் தூசுகள், நுண் கிருமிகள், அழுக்குகள் படிந்து அவை குளிர் காற்றின் மூலம் பரவி சுவாசக்கோளாறு பிரச்சினை களுக்கு வித்திடும். தலைவலி, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வழிவகுத்துவிடும். நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் சரும வறட்சி பிரச்சினையை அதிகம் எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் அதிகமாக ஏ.சி.யை பயன்படுத்துவது உடல்நலக்கோளாறை அதிகப்படுத்திவிடும்.
வயதானவர்களால் கடும் வெப்பத்தை தாங்கிக்கொள்ள இயலாது. அவர்களுடைய உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள ஏ.சி. உபயோகமாக இருக்கும். எனினும் அவர்களுக்கேற்ற வெப்பநிலையில் ஏ.சி.யை பராமரிக்க வேண்டும். முறையாக பயன்படுத்தினால் மட்டுமே ஏ.சி.யின் நன்மைகளை அனுபவிக்க முடியும்.
சருமம் பொலிவாக காட்சி யளிப்பதற்கு வைட்டமின் டி அவசியமானது. இது சூரியக்கதிர்கள் மூலம் எளிதில் உடலுக்கு கிடைக்கும். ஆகையால் வெப்பத்தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக சூரிய வெளிச்சமே உடலில் படாதவாறு ஏ.சி. அறைக்குள் முடங்கிக்கிடக்கக்கூடாது. தினமும் 15 நிமிடமாவது வெயிலில் நிற்க வேண்டியது அவசியம். வெளியே அலைந்து திரிந்துவிட்டு வீட்டுக்கு வந்தால் உடனடியாக ஏ.சி. அறைக்குள் புகுந்துவிடக்கூடாது. கை, கால்களை அலம்பிவிட்டு சிறிது நேரமாவது காற்றோட்டமான அறையில் அமர்ந்து சிறிது ஓய்வெடுக்க வேண்டும். பின்புதான் ஏ.சி.யை பயன்படுத்த வேண்டும்.

Related Tags :
Next Story