எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்து கரூர் முன்னாள் ராணுவ வீரர்-மகள் பலி
எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்து கரூர் முன்னாள் ராணுவ வீரர் மகளுடன் பலியானார். திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47) முன்னாள் ராணுவ வீரர். இவர், வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஒரு டாக்டரிடம் டிரைவராக இருந்தார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (41), இவர் அதே பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் வானதி (18), கரூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 2-வது மகள் கமலி (14), அவர்கள் வசிக்கும் பகுதியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கார் கவிழ்ந்தது
ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு கரூரில் இருந்து மனைவி, மகள்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டி வந்தார்.
நேற்று காலை 7.40 மணி அளவில் கார், மதுரை- தூத்துக்குடி நாற்கர சாலையில் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராம பகுதியில் வந்தது. அப்போது திடீரென்று ராஜேந்திரனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.
காரில் இருந்த 4 பேரும் சாலையில் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டனர். இதில் ராஜேந்திரனும், அவருடைய மூத்த மகள் வானதியும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்கள். விஜயலட்சுமி, கமலி ஆகியோர் பலத்த காயங்களுடன் அபய குரல் எழுப்பினர்.
அந்த வழியாக வந்தவர்கள் மாசார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மாசார்பட்டி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் காயம் அடைந்த தாய்-மகள் இருவரையும் மீட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே பலியான ராஜேந்திரன், வானதி ஆகியோரது உடல்களை போலீசார் மீட்டு விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். எட்டய புரம் அருகே கார் கவிழ்ந்து தந்தை- மகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story