கோத்தகிரி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
கோத்தகிரி அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள அரவேனு தவிட்டுமேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மகன் லெனின் ராஜ் (வயது 36), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அரசு பஸ்சில் சென்று உள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் லெனின் ராஜூக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அருகே பஸ்சை நிறுத்தி கண்டக்டர் பயணி லெனின் ராஜை இறங்கி விட்டார். பின்னர் மீண்டும் பஸ்சை டிரைவர் ஓட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின் சக்கரம் லெனின் ராஜின் கால்களில் ஏறி இறங்கியது. இதில் ஒரு கால் துண்டானது. மற்றொரு கால் நசுங்கியது.
இதில், பலத்த காயம் அடைந்த லெனின் ராஜ் அலறி சத்தம் போட்டார். இதையடுத்து, சக பயணிகள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லெனின் ராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி யோகலட்சுமி கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story