சிறுவாணி அணை பராமரிப்புக்காக கேரளாவுக்கு ரூ.10 கோடி பாக்கி மாநகராட்சி நிர்வாகம் விரைவாக வழங்க வலியுறுத்தல்
சிறுவாணி அணை பராமரிப்புக்காக கேரளாவுக்கு ரூ.10 கோடி பாக்கி கொடுக்க வேண்டி உள்ளது. இதை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து வழங்க வேண்டும் என்றும் குடிநீர் வடிகால் வாரியம் வலியுறுத்தி வருகிறது.
கோவை,
கோவை நகர மக்களுக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு அணைகளில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள பகுதிகளில் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கோவை நகரில் குடிநீர் வினியோக திட்டப்பணிகள் குடிநீர் வடிகால்வாரியம் மூலம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. பராமரிப்பு செலவு மற்றும் உபயோக கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்குகிறது.
ஒரு நாளைக்கு 24.8 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பில்லூர் நீர் வினியோகம் செய்த வகையில் ரூ.23 கோடி மாநகராட்சி கொடுக்க வேண்டியது உள்ளது. சிறுவாணி அணை பராமரிப்புக்காக கேரளாவுக்கு கொடுக்க வேண்டிய ரூ.10 கோடியையும் இன்னும் மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்று கூறப்படு கிறது.
இது போல், சிறுவாணி குடிநீர் வினியோகம் செய்வதற்காக மாதத்துக்கு ரூ.1 கோடியை குடிநீர் வடிகால் வாரியத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். ஏற்கனவே சிறுவாணி கணக்கில் நிலுவைத்தொகையாக ரூ.164 கோடி பாக்கி இருக்கிறது. இத்தொகையை விரைவாக பெறுவதற்காக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த தொகை இன்னும் கொடுக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
சிறுவாணி கணக்கில் பழைய நிலுவைத்தொகையை கேட்கவில்லை. தினமும் வினியோகம் செய்யப்படும் குடிநீருக்கான தொகை மற்றும் கேரளாவுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டு வருகிறோம். கோவை மாநகராட்சியில் தேவையான அளவுக்கு வரி வசூலாகி உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டால் மற்ற பணிகளுக்காக தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு தொகை கொடுக் கப்பட வேண்டியது உள்ளது என்று கூறுகிறார்கள்.
குடிநீர் வடிகால் வாரியத்துக்கான தொகையை வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் தாமதம் செய்து வருகிறது. இதனால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story