குரங்கணி வனப்பகுதி தீ விபத்தில் சிக்கி பலியான பெண் என்ஜினீயர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் பேரிடர் மேலாண்மை நிதி
குரங்கணி வனப்பகுதி தீ விபத்தில் பலியான உடுமலை பெண் என்ஜினீயர் சிவசங்கரியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிதி ரூ.4 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
உடுமலை,
கடந்த மாதம் தேனிமாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலை ஏற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கினர். இதில் உடுமலையை சேர்ந்த பெண் சிவில் என்ஜினீயர் சிவசங்கரியும் ஒருவர்.
உடுமலை காந்திநகர் சிக்கந்தர்பாஷா வீதியை சேர்ந்தவர் முருகபூபதி. இவர் உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி நாகரத்தினம், இவர்களது மகன் விசாகன் (வயது 30). மகள் சிவசங்கரி (25), விசாகனுக்கு திருமணமாகி விட்டது. பட்டப்படிப்பு படித்து விவசாயம் பார்த்து வருகிறார்.
சிவசங்கரிக்கு திருமணம் ஆகவில்லை. கோவையில் பி.இ. (சிவில்) படித்த இவர். அதன் பின்னர் மதுரையில் எம்.இ. படித்தார். தீ விபத்துக்கு 4 மாதங்களுக்கு முன்பு சென்னை சென்ற அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
மலையேற்ற பயிற்சியில் ஆர்வம் கொண்ட சிவசங்கரி சென்னையில் உள்ள மலையேற்ற பயிற்சி கிளப்பில் உறுப்பினராக சேர்ந்தார். இவர் சக உறுப்பினர்களுடன் கடந்த மாதம் (மார்ச்) 9-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு மலையேற்ற பயிற்சிக்காக குரங்கணி வனப்பகுதிக்கு சென்றார். அங்கு செல்வதற்கு முன்பு தனது பெற்றோருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். வனப்பகுதிக்குள் சென்றதும் டவர் கிடைக்காததால் பேச முடியாமல் போனது. இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியை அறிந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போடிக்கு சென்றனர். பின்னர் அங்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கிருந்து புறப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சிவசங்கரியை பார்த்தனர்.
மதுரை ஆஸ்பத்திரியில் மருத்துவக்குழுவினரால் சிவசங்கரிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிவசங்கரி கடந்த 3-ந்தேதி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் உடுமலையில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
குரங்கணி வனப்பகுதியில் நடந்த தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு மாநில இயற்கை இடர்பாடுகள் மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி உடுமலை பெண் என்ஜினீயர் சிவசங்கரியின் பெற்றோரிடம் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேரில் வழங்கினார்.
அப்போது கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக சிவசங்கரியின் குடும்பத்தினருக்கு அமைச்சர், எம்.பி., கலெக்டர் ஆர்.டி.ஓ. ஆகியோர் ஆறுதல் கூறினர்.

Related Tags :
Next Story