காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஊர்வலம்- மனித சங்கிலி போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஊர்வலம்- மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 15 April 2018 11:00 PM GMT (Updated: 2018-04-16T01:04:13+05:30)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குளித்தலையில் ஊர்வலம், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

குளித்தலை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. குளித்தலை பெரியார் நகர் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று குளித்தலை- முசிறி இடையே காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் பாலத்தில் முடிவடைந்தது.

பின்னர் அந்த பாலத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாலத்தின் ஒருபகுதியில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வரிசையாக நின்று ஒருவருக்கு, ஒருவர் தங்கள் கைகளை கோர்த்தபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், பல கட்சி மற்றும் அமைப்பை சேர்ந்தவர்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர்.

Next Story