மீன்பிடி தடைகாலம் தொடங்கியது: கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
மீன்பிடி தடைகாலம் நேற்று தொடங்கியதால் கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
கடலூர்,
கடந்த 16 ஆண்டுகளாக ஆண்டுதோறும் 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. கடலில் மீன்வளத்தை பெருக்குவதற்காக மீன்பிடி தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் நேற்று முதல் தொடங்கியது. இந்த தடைகாலம் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை அமலில் இருக்கும். இந்த காலத்தில் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளை தவிர வேறு எந்த வகையான மீன்பிடி படகுகளைக்கொண்டும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் உத்தரவை தொடர்ந்து கடலூர் மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகள் அனைத்தும் கடற்கரையில் ஓய்வு எடுக்கின்றன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் கடலூர் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளதால், துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மீன்பிடி தொழிலுக்கு செல்லாததால், படகுகளை கரைக்கு கொண்டு வந்து, பழுதுபார்க்கும் பணிகளையும், வலைகளை பழுதுபார்க்கும் பணிகளையும் மீனவர்கள் தொடங்கி உள்ளனர். ஆனால் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கிறார்கள். அதேநேரம் விசைப்படகுகள் மற்றும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் பெரிய படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால், கடலூரில் மீன்களின் விலை உயர்ந்து உள்ளது. இதேபோல் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் பகுதி மீனவர்களும் மீன் பிடிக்க செல்லவில்லை.

Related Tags :
Next Story