நடிகர் தனுஷ் பேனர் கிழிக்கப்பட்டதால் இரு தரப்பினர் இடையே மோதல், 6 பேர் கைது
நடிகர் தனுஷ் பேனர் கிழிக்கப்பட்டதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் அண்ணாநகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 24). கேபிள் டி.வி. ஆபரேட்டரான இவர், நடிகர் தனுஷின் தீவிர ரசிகர். இவர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அந்த பகுதியில் நடிகர் தனுஷ் ரசிகர் மன்ற பேனரை வைத்து இருந்தார்.
மறுநாள் அந்த பேனர் கிழிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மீண்டும் தனுஷ் படம் அச்சிடப்பட்ட மற்றொரு பேனரை அதே இடத்தில் வைத்தார். அந்த பேனரை யாராவது கிழிக்கிறார்களா? என பன்னீர்செல்வம் தனது தம்பி பாலகிருஷ்ணன் (22) உடன் மறைந்து இருந்து கண்காணித்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கேபிள் டி.வி. ஆபரேட்டரான ராஜி (37), தனது நண்பரான கராத்தே மாஸ்டர் புவியரசன் (29) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். புவியரசனை அங்கு இறக்கி விட்டு ராஜி தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
புவியரசன், அங்கிருந்த தனுஷ் பேனர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த பன்னீர்செல்வம், பாலகிருஷ்ணன் இருவரும் புவியரசன்தான் பேனரை கிழிக்க வந்து இருப்பதாக நினைத்து அவரிடம் வாக்குவாதம் செய்து, அவரை தாக்கினர்.
அதற்குள் சத்தம் கேட்டு ராஜி மற்றும் அவருடைய தந்தை ராமசாமி ஆகியோர் அங்கு வந்து புவியரசனுக்கு ஆதரவாக தகராறில் ஈடுபட்டனர். பன்னீர்செல்வம், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆதரவாக அவர்களுடைய தந்தை மாரியப்பனும் அங்கு வந்தார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கத்தி, இரும்பு கம்பி ஆகியவற்றால் தாக்கிக்கொண்டனர். இதில் காயம் அடைந்த 6 பேரும் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுபற்றி இரு தரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பையும் சேர்ந்த 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story