செய்யூர் அருகே விவசாயி வெட்டிக்கொலை: 2 பேரிடம் போலீசார் விசாரணை


செய்யூர் அருகே விவசாயி வெட்டிக்கொலை: 2 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 April 2018 5:00 AM IST (Updated: 16 April 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

செய்யூர் அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது 35). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன். பனை மரம் ஏறும் தொழிலாளி. கிருஷ்ணகுமார், கன்னியப்பன் இருவரும் நண்பர்கள். அதே பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன்(30), ராஜேஷ்(27), சிவா(24). இந்த நிலையில் நேற்று கள் குடிக்கும்போது கிருஷ்ணகுமார், கன்னியப்பன் இருவரிடமும் சரவணன், ராஜேஷ், சிவா ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது கன்னியப்பன் வைத்திருந்த அரிவாளை கிருஷ்ணகுமார் எடுத்து மிரட்டல் விடுத்து விட்டு கீழே போட்டார்.

அந்த அரிவாளை சரவணன் எடுத்து கிருஷ்ணகுமாரை சரமாரியாக வெட்டினார். இதில் கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜேஷ், சிவா ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய சரவணனை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story