‘டி.டி.வி. தினகரனுக்கு பதவி கொடுத்தால் அ.தி.மு.க.வில் இணைந்து விடுவார்’ முத்தரசன் பேட்டி
டி.டி.வி. தினகரனுக்கு பதவி கொடுத்தால் அ.தி.மு.க.வில் இணைந்து விடுவார் என்று சேலத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
சேலம்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று சேலம் வந்தார். பின்னர், அவர் சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்ட முடிவில் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சினைக்காக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தீக்குளித்து தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம். நமது உரிமையை போராடி வெற்றி பெறுவோம். தீக்குளிப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகள் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டபோது எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதை வைத்து பார்க்கும்போது மத்திய, மாநில ஆட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகிறது. மாநில அரசு அவர்களுக்கு உறுதுணையாக செயல்படுகிறது. காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க.வினர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது கொள்கையே இல்லாமல் மாநில உரிமையையும், நலனையும் மத்திய அரசிடம் அ.தி.மு.க. விட்டுக்கொடுத்து வருகிறது. ஜெயலலிதா இருந்தவரை இப்படி இல்லை. அவரது வழியில் நடப்பதாக கூறிவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் உரிமையை மீட்க தவறிவிட்டார்.
காவிரி பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு துரோகம் செய்து விட்டன. இதனால் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும்.
தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு சொந்த பலமும், மக்களின் ஆதரவுமும் இல்லை. பிரதமர் மோடியின் தயவில் இங்கு ஆட்சி நடக்கிறது. ஆட்சி மாற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் மத்திய, மாநில ஆட்சிகளை அகற்ற அனைத்து மக்களும் முன்வர வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி தேவையில்லை. மத்திய பா.ஜனதா அரசின் வகுப்பு வாதத்தை எதிர்த்து அனைவரும் போருக்கு வர வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளும் இனிவரும் காலங்களில் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விருப்பம் ஆகும். அப்போது தான் மத்திய, மாநில ஆட்சிகளை அகற்ற முடியும். அதை தான் மக்களும் விரும்புகிறார்கள்.
டி.டி.வி.தினகரனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரே கொள்கை தான். ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே தர்மயுத்தம் நடத்தினார். இதில் அவர் வெற்றி பெற்றாரா? பதவி கிடைத்தவுடன் எடப்பாடியுடன் சேர்ந்துவிட்டார். அதேபோல், டி.டி.வி.தினகரனுக்கும் ஏதாவது பதவி கொடுத்தால் அவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைந்து விடுவார்.
இவ்வாறு முத்தரசன் கூறினார். இந்த பேட்டியின்போது, மாவட்ட செயலாளர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. நஞ்சப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story