காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு சாமுண்டீஸ்வரியில் சித்தராமையா, கொரட்டக்கெரேயில் பரமேஸ்வர் போட்டி


காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு சாமுண்டீஸ்வரியில் சித்தராமையா, கொரட்டக்கெரேயில் பரமேஸ்வர் போட்டி
x
தினத்தந்தி 16 April 2018 4:30 AM IST (Updated: 16 April 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி 218 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி 218 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சாமுண்டீஸ்வரியில் சித்தராமையாவும், கொரட்டக்கெரேயில் பரமேஸ்வரும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல்

இதையொட்டி ஜனதாதளம் (எஸ் )கட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே 126 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் பா.ஜனதா கட்சி 72 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

ஆனால் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஆகி வந்தது. அதாவது, சீட் கிடைக்காதவர்கள் கட்சி தாவலில் ஈடுபடக் கூடும் என்பதை கருத்தில் கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் தாமதப்படுத்தி வந்ததாக தகவல் வெளியானது. அதே வேளையில் சாமுண்டீஸ்வரியில் போட்டியிட முடிவு செய்த முதல்-மந்திரி சித்தராமையா அந்த தொகுதியில் கருத்துக்கணிப்பு நடத்தினார். அதில் அந்த தொகுதியில் சித்தராமையாவுக்கு வெற்றி என்பது எளிதல்ல என்பது தெரியவந்தது. இதனால் அவர் சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். ஆனால் இதற்கு அக்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எதிர்க்கட்சியினரும் தோல்வி பயத்தில் சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக குற்றம்சாட்டி வந்தனர்.

218 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல்

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணி அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் டெல்லியில் நடந்து வந்தது. கடந்த 9-ந்தேதி தொடங்கிய இந்த பணி 12-ந்தேதி வரை நடைபெற்றது. ஆனால் சித்தராமையாவின் முடிவுக்கு சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், தேர்தல் பரிசீலனை குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில், ராகுல்காந்தி முன்னிலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி சித்த ராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று மாலை பெங்களூருவுக்கு திரும்பினர். இதைதொடர்ந்து நேற்று இரவு 8.30 மணி அளவில் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 218 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழருக்கு வாய்ப்பு

இதில் சாந்தி நகர், மேல்கோட்டை, சிந்தகி, நாகடனா, ராய்ச்சூர், கித்தூர் ஆகிய 6 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும் வேட்பாளர் பட்டியலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவும், கொரட்டக்கெரேயில் பரமேஸ்வரும் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரசில் இணைந்த ஜமீர்அகமதுகான், அகண்ட சீனிவாசமூர்த்தி, செலுவராயசாமி உள்ளிட்ட 7 பேரும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் 2 தலைவர்களின் வாரிசுகளுக்கு புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, சித்தராமையாவின் மகனான யதீந்திரா வருணா தொகுதியிலும், மந்திரி ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ஜெயநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். பொதுப்பணித் துறை மந்திரி மகாதேவப்பாவின் மகன் சுனீல் போசுக்கு வருகிற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மேலும் பெங்களூரு மாநகராட்சி மேயராக உள்ள தமிழரான சம்பத்ராஜ் சி.வி.ராமன் நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் மந்திரி கமரூல் இஸ்லாமின் மனைவி பாத்திமா கலபுரகி வடக்கு தொகுதியிலும், நடிகர் அம்பரீசுக்கு மண்டியா தொகுதியும், மந்திரியும், நடிகையுமான உமாஸ்ரீ தெரதால் தொகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே டிக்கெட் கிடைக்காமல் போன காங்கிரஸ் பிரமுகர்கள் நேற்று காலையிலேயே கட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

218 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பின்வருமாறு:-

பெலகாவி புறநகர்-லட்சுமி ஹெப்பால்கர்

1. நிப்பானி - காகசாகேப் பட்டீல்

2. சிக்கோடி-சடலகா - கணேஷ் ஹூக்கேரி

3. அதானி - மகேஷ் எரகணகவுடா குமடள்ளி

4. காக்வாட் - ஸ்ரீமந்த் பாலசாகேப் பட்டீல்

5. குடச்சி - அமித் சாமா கட்ஜி

6. ராயபாக் - பிரதீப் குமார் மலகி

7. உக்கேரி - ஏ.பி.பட்டீல்

8. அரபாவி - அரவிந்த் மகாதேவ் ராவ் தள்வாய்

9. கோகாக் - ரமேஷ் லட்சுமணராவ் ஜார்கிகோளி

10. எமகனமரடி - சதீஷ் ஜார்கிகோளி

11. பெலகாவி வடக்கு - பைரோஸ் என்.சேட்

12. பெலகாவி தெற்கு - லட்சுமி நாராயணா

13. பெலகாவி புறநகர் - லட்சுமி ஹெப்பால்கர்

14. கானாப்புரா - அஞ்சலி நிம்பால்கர்

15. பைலஒங்காலா - மகாந்தேஷ் எஸ்.கவுஜலகி

16. சவதத்தி-எல்லம்மா - விஸ்வாஸ் வசந்த் வைத்யா

17. ராமதுர்கா - பி.எம்.அசோக்

18. முதோல் - சதீஷ் சின்னப்பா பண்டிவாதர்

19. தெரதால் - உமாஸ்ரீ

20. ஜகமகண்டி - சித்து நியாமேகவுடா

21. பீலகி - ஜெகதீஷ் திம்மனகவுடா பட்டீல் (ஜே.டி.பட்டீல்)

22. பாதாமி - தேவராஜ் பட்டீல்

23. பாகல்கோட்டை - எச்.ஒய்.மேட்டி

24. உனகுந்த் - விஜயானந்த் எஸ்.கசப்பனவர்

25. முத்தேபிகால் - அப்பாஜி என்ற சன்னசவராஜ் நாடகவுடா

26. தேவரஹிப்பரகி - பாபுகவுடா எஸ்.பட்டீல்

27. பசவனபாகேவாடி - சிவானந்த் பட்டீல்

28. பபலேஷ்வர் - எம்.பி.பட்டீல்

கமரூல் இஸ்லாம் மனைவி பாத்திமா

29. விஜயாப்புரா நகர் - அப்துல் ஹமீது முஷ்ரீப்

30. இண்டி - யஷ்வந்த்ராயகவுடா வி.பட்டீல்

31. அப்சல்புரா - எம்.ஒய்.பட்டீல்

32. ஜீவர்கி - அஜய்சிங்

33. சுராப்புரா - ராஜவெங்கடப்பா நாயக்

34. சகாப்புரா - சரவணபசப்பா தர்சனபுரா

35. யாதகிரி - மாலகாரெட்டி

36. குர்மித்கல் - பாபுராவ் சின்சனசூர்

37. சித்தாப்புரா - பிரியங்க் கார்கே

38. சேடம் - சரணபிரகாஷ் பட்டீல்

39. சிஞ்சோலி - உமேஷ் யாதவ்

40. கலபுரகி புறநகர் - விஜயகுமார் ராமகிருஷ்ணா

41. கலபுரகி தெற்கு - ஆலம்பிரபு பட்டீல்

42. கலபுரகி வடக்கு - கே.பாத்திமா (கமரூல் இஸ்லாம் மனைவி)

43. ஆலந்தா - பி.ஆர்.பட்டீல்

44. பசவகல்யாண் - நாராயணராவ்

45. உம்னாபாத் - ராஜசேகர் பி.பட்டீல்

46. பீதர் தெற்கு - அசோக் கேனி

47. பீதர் - ரகீம்கான்

48. பால்கி - ஈஸ்வர் கண்ட்ரே

49. அவுராத் - விஜயகுமார்

50. ராய்ச்சூர் புறநகர் - பசனகவுடா

51. மான்வி - ஹம்பை நாயக்

52. தேவதூர்கா - ராஜசேகர் நாயக்

53. லிங்கசூகூர் - துர்கப்பா ஹொலகெரே

54. சிந்தனூர் - ஹம்மனகவுடா பத்ரலி

55. மாஸ்கி - பிரதாப்கவுடா பட்டீல்

56. குஷ்டகி - அமரேகவுடா எல்.பட்டீல் பையாப்பூர்

57. கனககிரி - சிவராஜ் சங்கப்பா தங்கடகி

58. கங்காவதி - இக்பால் அன்சாரி

59. எலபுர்கா - பசவராஜ் ராயரெட்டி

60. கொப்பல் - ராகவேந்திரா கே.ஹிட்னால்

61. சிரகட்டி - தொட்டமணி ராமகிருஷ்ணா சித்தலிங்கப்பா

62. கதக் - ஹனமந்த்கவுடா பட்டீல் (எச்.கே.பட்டீல்)

63. ரோண் - பட்டீல் குருபாதகவுடா சங்கனகவுடா

64. நரகுந்து - பசவராத்தி எவகல்

65. நவலகுந்து - வினோத் கே.அசோத்தி

66. குந்துகோல் - சன்னபசப்பா சிவள்ளி

ஹலியால்- ஆர்.வி.தேஷ்பாண்டே

67. தார்வார் - வினய் குல்கர்னி

68. உப்பள்ளி-தார்வார் கிழக்கு - பிரசாத் அப்பய்யா

69. உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் - மகேஷ் சி.நலவாத்

70. உப்பள்ளி-தார்வார் மேற்கு - முகமது இஸ்மாயில் தமட்கர்

71. கல்கட்டகி - சந்தோஷ் லாட்

72. ஹலியால் - ஆர்.வி.தேஷ்பாண்டே

73. கார்வார் - சதீஷ் கிருஷ்ண செயில்

74. கும்டா - சாரதா மோகன் செட்டி

75. பட்கல் - மங்கல் சுப்பா வைத்யா

76. சிர்சி - பீமண்ணா நாயக்

77. எல்லாப்புரா - அரபைல் ஹெப்பார் சிவராம்

78. ஹனகல் - மனே சீனிவாஸ்

79. சிக்காம் - சையத் அஜிம்பீர் எஸ்.காத்ரி

80. ஹாவேரி - ருத்ரப்பா மானப்பா லமானி

81. பேடகி - எஸ்.ஆர்.பட்டீல்

82. ஹிரேஹெரூர் - பி.சி.பட்டீல்

83. ராணிபென்னூர் - கே.பி.கோலிவாட்

84. ஹடஹள்ளி - பரமேஸ்வர் நாயக்

85. அகரிபொம்மனஹள்ளி - பீமாநாயக்

86. விஜயநகர் (பல்லாரி) - ஆனந்த் சிங்

87. கம்பளி - கணேஷ்

88. சிரகுப்பா - முரளி கிருஷ்ணா

89. பல்லாரி - நாகேந்திரா

90. பல்லாரி நகர் - அனில் லாட்

91. சந்தூர் - துக்காராம்

92. கூட்லகி - ரகு குஜ்ஜால்

93. முலகால்மூரு - யோகேஷ் பாபு

94. செல்லக்கெரே - ரகு மூர்த்தி

95. சித்ரதுர்கா - சண்முகப்பா

96. இரியூர் - சுதாகர்

97. ஒசதுர்கா - கோவிந்தப்பா

98. ஒலல்கெரே - எச்.ஆஞ்சனேயா

99. ஜகலூர் - புஷ்பா

சாகர்- காகோடு திம்மப்பா

100. ஹரப்பனஹள்ளி - ரவீந்திரா

101. ஹரிஹரா - ராமப்பா

102. தாவணகெரே வடக்கு - எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன்

103. தாவணகெரே தெற்கு - எஸ்.சிவசங்கரப்பா

104. மாயகொண்டா - பசவராஜா

105. சென்னகிரி - வத்னால் ராஜண்ணா

106. ஒன்னாளி - சாந்தனகவுடா

107. சிவமொக்கா புறநகர் - சீனிவாஸ் கரியண்ணா

108. பத்ராவதி - சங்கமேஸ்வரா

109. சிவமொக்கா - பிரசன்னகுமார்

110. தீர்த்தஹள்ளி - கிம்மனே ரத்னாகர்

111. சிகாரிப்புரா - மாலத்தேஷ்

112. சொரப் - ராஜு எம்.தல்லூர்

113. சாகர் - காகோடு திம்மப்பா

114. பைந்தூர் - கோபால பூஜாரி

115. குந்தாப்புரா - ராகேஷ் மல்லி

116. உடுப்பி - பிரமோத் மத்வராஜ்

117. காபு - வினய்குமார் சொரகே

118. கார்கலா - கோபால பண்டாரி

119. சிருங்கேரி - ராஜே கவுடா

120. மூடிகெரே - மோட்டம்மா

121. சிக்கமகளூரு - சங்கர்

கொரட்டகெரே- பரமேஸ்வர்

122. தரிகெரே - நாகராஜ்

123. கடூர் - ஆனந்த்

124. சிக்கநாயக்கனஹள்ளி - சந்தோஷ் ஜெயசந்திரா

125. திப்தூர் - நஞ்சமாரி

126. துருவகெரே - ரங்கப்பா டி.சவுத்ரி

127. குனிகல் - ரங்கநாத்

128. துமகூரு டவுன் - ரபீக் அகமது

129. துமகூரு புறநகர் - ரவிக்குமார்

130. கொரட்டகெரே - பரமேஸ்வர்

131. குப்பி - குமார்

132. சிரா - டி.பி.ஜெயசந்திரா

133. பாவகடா - வெங்கட ரமணப்பா

134. மதுகிரி - கியாத்த சந்திரா என்.ராஜண்ணா

135. கவுரிபித்தனூர் - சிவசங்கர ரெட்டி

136. பாகேபள்ளி - சுப்பா ரெட்டி

137. சிக்பள்ளாப்பூர் - சுதாகர்

138. சிட்லகட்டா - முனியப்பா

139. சிந்தாமணி - வாணி கிருஷ்ணரெட்டி

140. சீனிவாசப்பூர் - ரமேஷ் குமார்

141. முல்பாகல் - மஞ்சுநாத்

142. கோலார் தங்கவயல் - ரூபா சசிதர்

143. பங்காருபேட்டை - நாராயண சாமி

144. கோலார் - சையத் சமீர் பாஷா

145. மாலூர் - நஞ்சேகவுடா

146. எலகங்கா - கோபால கிருஷ்ணா

147. கே.ஆர்.புரம் - பசவராஜ்

148. பேடராயனபுரா - கிருஷ்ணபைரே கவுடா

149. யஷ்வந்தபுரம் - சோமசேகர்

150. ராஜராஜேஸ்வரி நகர் - முனிரத்னா

151. தாசரஹள்ளி - கிருஷ்ண மூர்த்தி

152. மகாலட்சுமி லே-அவுட் - மஞ்சுநாத்

153. மல்லேசுவரம் - சீதாராம்

154. ஹெப்பால் - சுரேஷ்

155. புலிகேசிநகர் - அகண்ட சீனிவாச மூர்த்தி

156. சர்வக்ஞ நகர்- கே.ஜே.ஜார்ஜ்

157. சி.வி.ராமன் நகர்- சம்பத் ராஜ்

158. சிவாஜிநகர்- ரோஷன் பெய்க்

159. காந்தி நகர்- தினேஷ் குண்டுராவ்

160. ராஜாஜி நகர் - பத்மாவதி

161. கோவிந்தராஜ்நகர் - பிரியா கிருஷ்ணா

162. விஜயநகர் - கிருஷ்ணப்பா

163. சாம்ராஜ்பேட்டை - ஜமீர் அகமது கான்

164. சிக்பேட்டை - ஆர்.வி.தேவராஜ்

165. பசவனகுடி - போரேகவுடா

166. பத்மநாபநகர் - குரப்பா நாயுடு

167. பி.டி.எம். லே-அவுட் - ராமலிங்க ரெட்டி

168. ஜெயநகர் - சவுமியா ராமலிங்க ரெட்டி

169. மகாதேவபுரா - சீனிவாஸ்

170. பொம்மனஹள்ளி - சுஷ்மா ராஜ்கோபால் ரெட்டி

171. பெங்களூரு தெற்கு - ஆர்.கே.ரமேஷ்

172. ஆனேக்கல் - சிவண்ணா

173. ஒசக்கோட்டை - நாகராஜ்

174. தேவனஹள்ளி - வெங்கடசாமி

175. தொட்டபள்ளாப்புரா - வெங்கட ராமனய்யா

176. நெலமங்களா - நாராயண சாமி

177. மாகடி - பாலகிருஷ்ணா

நடிகர் அம்பரீஷ்

178. ராமநகர் - இக்பால் உசேன்

179. கனகபுரா - டி.கே.சிவக்குமார்

180. சென்னப்பட்டணா - எச்.எம்.ரேவண்ணா

181. மலவள்ளி - நரேந்திர சுவாமி

182. மத்தூர் - மது

183. மண்டியா - நடிகர் அம்பரீஷ்

184. ஸ்ரீரங்கப்பட்டணா - ரமேஷ் பாபு பண்டிசித்தேகவுடா

185. நாகமங்களா - செலுவராயசாமி

186. கிருஷ்ணராஜபேட்டை - சந்திர சேகர்

187. சரவணபெலகோலா - புட்டேகவுடா

188. அரிசிகெரே - சசிதர்

189. பேளூர் - கீர்த்தனா ருத்ரேகவுடா

190. ஹாசன் - மகேஷ்

191. ஒலேநரசிப்புரா - மஞ்சேகவுடா

192. அரக்கல்கோடு - ஏ.மஞ்சு

193. சக்லேஷ்புர ா- சித்தய்யா

194. பெல்தங்கடி - வசந்த பங்கேரா

195. மூடபித்ரி - அபயசந்திர ஜெயின்

196. மங்களூரு வடக்கு - மொய்தீன் பாவா

197. மங்களூரு தெற்கு - ஜான் ரிச்சர்ட் லோபோ

198. மங்களூரு - யு.டி. காதர்

199. பண்ட்வால் - ரமாநாத் ராய்

200. புத்தூர் - சகுந்தலா டி.ஷெட்டி

201. சுள்ளியா - டாக்டர் பி.ரகு

202. மடிகேரி - சந்திர மவுலி

சாமுண்டீஸ்வரி- சித்தராமையா

203. விராஜ்பேட்டை - அருண் மச்சய்யா

204. பிரியப்பட்டணா - வெங்கடேஷ்

205. கிருஷ்ணராஜநகர்- ரவிசங்கர்

206. உன்சூர்- மஞ்சுநாத்

207. எச்.டி.கோட்டை- அனில்குமார்

208. நஞ்சன்கூடு- களளே கேசவமூர்த்தி

209. சாமுண்டீஸ்வரி- சித்தராமையா

210. கிருஷ்ணராஜா- சோமசேகர்

211. சாமராஜா- வாசு

212. நரசிம்மராஜா- தன்வீர் சேட்

213. வருணா- யதீந்திரா

214. டி.நரசிப்புரா- மகாதேவப்பா

215. ஹனூர்- நரேந்திரா

216. கொள்ளேகால்- ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

217. சாம்ராஜ்நகர்- புட்டரங்கஷெட்டி

218. குண்டலுபேட்டை- கீதா மகாதேவ பிரசாத்

Next Story