விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாராவியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாராவியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 16 April 2018 4:45 AM IST (Updated: 16 April 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாராவியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மும்பை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாராவியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அம்பேத்கர் பிறந்தநாள்

மராட்டிய மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் 127-வது பிறந்த நாள் விழா, அன்னதானம் வழங்குதல் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்கும் விழா நேற்று முன்தினம் தாராவி, கிராஸ் ரோடு இரட்டை மலை சீனிவாசன் சதுக்கத்தில் வைத்து கொண்டாடப்பட்டது. விழாவில் வி.ஜே.பாலன், ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சாலமன் ராசா வரவேற்று பேசினார். கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்குட்டி, பொ.அன்பழகன், முருகசீலன், ராஜா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

சிறப்பு விருந்தினர்கள்

வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ., கவுன்சிலர் கங்கா குணால் மானே, பாக்கியநாதன், ராஜாபால், வாகில் சேக் அகமது, ரவி ரஜினி, மூர்த்தி, கோபாலகிருஷ்ணன், ஜாகீர் உசேன், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் டி.ஏ.கனகராஜ், செயலாளர் சலோமன் ராசா, சேவியர் செல்வா, ஆசை வளவன், மாநகர இணை செயலாளர்கள் முத்துவளவன், சக்திவேல், சுபாஷ் சந்திரபோஸ், மதன், முத்தமிழ் அரசன், சக்திவேல் கனகராஜ், சந்திரசேகர், தானே சுபாஷ் நகர் செயலாளர் ஜி.ராஜா, பொருளாளர் இம்மானுவேல் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Next Story