தானேயில் மான் கொம்புகளுடன் தொழிலாளி கைது
தானேயில் மான் கொம்புகளுடன் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தானே,
தானேயில் மான் கொம்புகளுடன் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மான் கொம்புகள் பறிமுதல்
மும்பையை சேர்ந்த ஒருவர், தானே வர்தக் நகரில் உள்ள ஓட்டலுக்கு மான் கொம்புகளை விற்பனை செய்ய வர உள்ளதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவத்தன்று வர்தக் நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் சந்தேகத்திற்கு இடமாக அங்கு வந்த வாலிபர் ஒருவரை பிடித்து, அவர் வைத்திருந்த பையில் சோதனை போட்டனர். அந்த பையில் இருந்த மான் கொம்புகளை பறிமுதல் செய்தனர்.
ரூ.10 லட்சம் மதிப்பு
மேலும் மான் கொம்புகளுடன் வந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் அந்தேரி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சந்தோஷ் (வயது31) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோசுக்கு மான் கொம்புகள் எப்படி கிடைத்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மான் கொம்புகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story