வைரஸ்களும், பாக்டீரியாக்களும்...


வைரஸ்களும், பாக்டீரியாக்களும்...
x
தினத்தந்தி 16 April 2018 2:52 PM IST (Updated: 16 April 2018 2:52 PM IST)
t-max-icont-min-icon

.

வைரஸ்களை கண்டறிந்தவர் டிமிட்ரி ஐவனோஸ்கி.

பாக்டீரியாக்களை கண்டறிந்தவர் லிவன்காக்.

வைரஸ் என்பதற்கு நச்சு என்று பொருள்.

பாக்டீரியா என்பதற்கு குச்சி என்று பொருள்.

வைரஸ்களின் அளவு நானோ மீட்டரில் 10-9 இருக்கும் .

பாக்டீரியாக்களின் அளவு மைக்ரான்களில்10-6 இருக்கும்.

வைரஸ்களை எலக்ட்ரான் நுண்ணோக்கியில்தான் பார்க்க முடியும்

பாக்டீரியாக்களை கூட்டு நுண்ணோக்கியில் பார்க்கலாம்.

வைரஸ் உயிருள்ள செல்களில் மட்டுமே வளரும்.

பாக்டீரியா உயிருள்ள, உயிரற்ற செல்களில் வளரும்.

வைரஸ் அது தாக்கும் உயிரினத்தின் செல்லுக்கு உள்ளேதான் வளரும்.

பாக்டீரியா அது தாக்கும் உயிரினத்தின் செல்லுக்குள்ளும் வெளியிலும் வளரும்.

வைரஸ் செல் இல்லாத உயிரினம்.

பாக்டீரியா ஒரு செல் உயிரி.

வைரஸ் மரபுப் பொருள் புரத உறை ஆகிய இரண்டையும் கொண்டது.

பாக்டீரியா மரபுப்பொருளும் புரோகேரியாட் அமைப்பும் கொண்டது.

வைரசின் மரபுப்பொருள் டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ.

பாக்டீரியாவின் மரபுப்பொருள் டி.என்.ஏ.

வைரஸ் ஆண்டி பயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாதது.

பாக்டீரியா ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படும். 

Next Story