தாராபுரத்தில் கோவில் சிலைகளை உடைத்த வழக்கில் ஒருவர் கைது


தாராபுரத்தில் கோவில் சிலைகளை உடைத்த வழக்கில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 17 April 2018 4:00 AM IST (Updated: 17 April 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் கோவில் சிலைகளை உடைத்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-அலங்கியம் ரோட்டில் காவிரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள நாகம்மா தேவி, விநாயகர் சிலை ஆகியவற்றை கடந்த 14-ந்தேதி மர்ம ஆசாமி உடைத்து போட்டுவிட்டு சென்று இருப்பது தெரியவந்தது. அதுபோன்று அமராவதி ஆற்றங்கரையில் அம்மாமடுவு என்ற இடத்தில் உள்ள நாச்சம்மா கோவிலில் உள்ள சிலைகளையும், வேல்களையும் உடைத்து விட்டு சென்று விட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை உடைத்த மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று தாராபுரம் -அலங்கியம் சாலையில் தாராபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணமாக பதில் கூறியுள்ளார். தொடர் விசாரணையில் அவர் தாராபுரம் பெரியார் மேற்கு தெருவை சேர்ந்த மூர்த்தி என்கிற மருதாசலம் (வயது 40) என்று தெரியவந்தது. இவர்தான் காவிரி அம்மன் கோவிலிலும், நாச்சம்மா கோவிலிலும் சிலைகளை உடைத்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சிலைகளை உடைத்த வழக்கில் மூர்த்தி என்கிற மருதாசலத்தை போலீசார் கைது செய்தனர். 

Next Story