ராணுவ லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: கேரளாவை சேர்ந்த 2 வாலிபர்கள் பலி
ஊட்டிக்கு சுற்றுலா வந்த இடத்தில் ராணுவ லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கேரளாவை சேர்ந்த 2 வாலிபர்கள் பலியானார்கள்.
ஊட்டி,
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பிரதீஷ் (வயது 21), மெக்கானிக். ராகுல் (20). இவர் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் தனது நண்பர்கள் 6 பேருடன் 4 மோட்டார் சைக்கிள்களில் ஊட்டிக்கு சுற்றுலா வருவதற்காக நேற்று ஊட்டி-கூடலூர் சாலையில் வந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் மோட்டார் சைக்கிளில் முந்தியபடி வந்து கொண்டு இருந்தனர்.
பிரதீஷ் மோட்டார் சைக்கிளை ஓட்ட பின்னால் ராகுல் அமர்ந்திருந்தார். அவர்கள் காமராஜ் சாகர் அணை அருகே பாலத்தின் வளைவில் சென்ற போது, திடீரென எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் எதிரே வந்த ராணுவ லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் லாரியின் அடிப் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகமாக சென்று சிக்கி கொண்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராகுல் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், ராகுல் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர்கள் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.
ஊட்டிக்கு சுற்றுலா வந்த போது, பிரதீஷ், ராகுல் இருவரும் விபத்தில் இறந்து விட்டதால் அவரது சக நண்பர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே காமராஜ் சாகர் அணை அருகே கேரள மாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் வாகனங்களின் முன்பகுதி சேதமடைந்தது. ஊட்டிக்கு புதிதாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற, இறக்கம் மிகுந்த மலைப்பாதையில் வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்பது தெரிவது இல்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க வேகக்கட்டுப்பாடு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இது குறித்து ஆங்காங்கே சாலையோரங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், இதுபோன்ற விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. எனவே, விபத்துகள் நடைபெறும் பகுதியில் வேகத்தடை அல்லது தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story