கும்மிடிப்பூண்டி அருகே மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவ, மாணவிகள் வாந்தி-மயக்கம், எழும்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதி
கும்மிடிப்பூண்டி அருகே மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட னர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரநாயக்கன்பேட்டையில் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று மதிய உணவாக பிரிஞ்சி சாதம் மற்றும் அவித்த முட்டை வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட 26 மாணவ-மாணவிகள் திடீரென வாந்தி எடுத்தனர். அவர்களில் சிலர் மயங்கி விழுந்தனர்.
இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் 26 பேரையும் ஈகுவார்பாளையத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவலறிந்து பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, கும்மிடிப்பூண்டி தாசில் தார் ராஜகோபால், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் அங்கு வந்தனர். மாணவர்கள் பாதிக்கப்பட்டது அறிந்து அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈகுவார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ராஜன் (வயது 9), கவின் (6), கவுதம் (10), விஜயகுமாரி (9), ஹேமவர்சினி (10) உள்ளிட்ட 16 மாணவ-மாணவிகள் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன்பிறகு பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் மற்ற மாணவ-மாணவிகளும் ஈகுவார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து இரவு 7 மணி அளவில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னதாக மாணவ-மாணவிகள் சிகிச்சை பெற்று வந்த ஈகுவார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி நேரில் வந்து ஆய்வு நடத்தினார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், உணவு சமைத்த பெண் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் கலெக்டர் சுந்தரவல்லி நிருபர்களிடம் கூறுகையில், “மதிய உணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு எதனால் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது என்பதை கண்டறிய பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உடனடியாக மேற்கண்ட பள்ளிக்கு சென்றும், ஆஸ்பத்திரியில் உள்ள பெற்றோர்கள் மற்றும் அலுவலர்களை விசாரித்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய சொல்லி இருக்கிறோம்” என்றார்.
மேலும், குழந்தைகள் சாப்பிட்ட உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றின் மாதிரியை டாக்டர்கள் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி இருப்பதாகவும், யாராவது தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story