மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கிணற்றில் குதித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த செம்பூண்டியை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 28). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மேகலா. இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ஏழுமலைக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டைபோட்டு வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்தார்.
இதனால் அவருடைய மனைவி மேகலா, கணவருடன் கோபித்துக்கொண்டு அவரை விட்டு பிரிந்து, தனது குழந்தைகளுடன் மேல்மருவத்தூரை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வரமறுத்து விட்டார். தனது மனைவி பிரிந்து சென்று விட்டதால் ஏழுமலை மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து ஏழுமலை தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை கிணற்றுக்குள் அவர் பிணமாக கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் மேகலாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுபற்றி மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் மிதந்த ஏழுமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, தனது மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story