கழிவுநீர் கால்வாயை தரமானதாக அமைக்க வேண்டும் இளைஞர்கள் கலெக்டரிடம் மனு


கழிவுநீர் கால்வாயை தரமானதாக அமைக்க வேண்டும் இளைஞர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 17 April 2018 4:30 AM IST (Updated: 17 April 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

கழிவுநீர் கால்வாயை தரமானதாக அமைக்க கோரி எறையூர் பகுதி இளைஞர்கள் கலெக்டர் சாந்தாவிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். தொடர்ந்து பொது மக்களிடம் இருந்து கோரிக்கை அடங்கிய மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் எறையூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், சின்னாறில் இருந்து பெருமுத்தூர் வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த சாலையையொட்டி கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. ஆனால் இது தரமானதாக அமைக்கப்படவில்லை. சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு 2 நாட்களிலேயே இடிந்து விட்டது. எனவே கழிவுநீர் கால்வாயை தரமான தாக அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதே போன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானபேர்கள் மனுக் களை கொடுத்தனர். கூட்டத்தில் 216 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் 20 பேருக்கு ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர சைக்கிள் மற்றும் நிதி உதவி, 10 பேருக்கு இலவச பஸ் பாஸ் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story