பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் காலணி கட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு
அரியலூர் அருகே பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் காலணி கட்டி தொங்கவிடப்பட்டிருந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தாமரைக்குளம்,
அரியலூர் அருகே ஓட்டக்கோவில் கிராமத்தில் பா.ஜ.க. கொடிக்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் மர்ம நபர்கள் காலணியை கட்டி தொங்கவிட்டு இருந்தனர். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அரியலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொடிக்கம்பத்தில் தொங்கி கொண்டிருந்த காலணியை அப்புறப்படுத்தினர். பின்னர் இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி, சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சம்பவ இடத்தில் பா.ஜ.க.வினர் கூடினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது போலீசார் சம்பந்தப்பட்ட மர்ம நபரை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. மாவட்ட பொது செயலாளர் இனிக்கும் சேட் அரியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரில், கட்சிக்கொடியை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Related Tags :
Next Story