மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிதி உதவி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.4.80 லட்சம் மதிப்பில் 10 பேருக்கு நிதி உதவி கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேலும் கலெக்டர் ரோகிணி, மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கைக்கு நேரில் சென்று அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முதலீட்டு நிதியாக கறவை மாடு, ஜெராக்ஸ் எந்திரம் வாங்குவதற்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கான காசோலையினையும், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து மின்பணியின் போது மின்சாரம் தாக்கி இறந்த கோவிந்தராஜ் என்பவரின் வாரிசுகளுக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையினையும் என மொத்தம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நிதி உதவியை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 555 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story