நாட்டில் கலவரத்தை உருவாக்க பா.ஜனதா திட்டம்; ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு
நாட்டில் கலவரத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது என ராஜ் தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பை,
மும்பை முல்லுண்டில் நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் 100 பெண்களுக்கு ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கலந்து கொண்டு பேசியதாவது:-
மத்திய அரசு எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. அக்கட்சி நாட்டில் கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தனது மதத்தை பற்றி தெரியாத 8 வயது சிறுமி மிகப்பெரிய கொடுமைகளை அனுபவித்து உள்ளாள். இங்கு ஒரு கட்சி சிறுமியை கற்பழித்தவர்களை பாதுகாத்து வருகிறது. சிறுமியை கற்பழித்தவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் ‘பாரத் மாதா கீ ஜெய்' என முழக்கமிட்டது கண்டனத்திற்கு உரியது.
கற்பழிப்பு வழக்கில் சிக்குபவர்களுக்கு சவுதி அரேபியாவில் வழங்கப்படுவது போல தண்டனை இங்கும் வழங்கப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு துணிவு இருந்தால் பாகிஸ்தான், வங்கதேச முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றலாம். அவர்கள் தான் ஆபத்தானவர்கள். காஷ்மீர் சிறுமி அல்ல.
மோடி பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க உள்ளேன் என்பார். ஆனால் நவாஸ் ஷெரிப் பிறந்தநாள் அன்று பாகிஸ்தானுக்கு சென்று கேக் வெட்டி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். மோடி தனக்கு உரிய அதிகாரங்களை வீணாக்குகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story