மணிமுத்தாறு– மாஞ்சோலை ரோடு சீரமைப்புக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


மணிமுத்தாறு– மாஞ்சோலை ரோடு சீரமைப்புக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 18 April 2018 3:00 AM IST (Updated: 17 April 2018 7:44 PM IST)
t-max-icont-min-icon

மணிமுத்தாறு– மாஞ்சோலை ரோடு சீரமைப்புக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

அம்பை, 

மணிமுத்தாறு– மாஞ்சோலை ரோடு சீரமைப்புக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் வீடு திட்டம் 

நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகரசபை பகுதியில் குடியிருக்கும் நபர்களுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 600 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணை வழங்கும் விழா அம்பையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், கூட்டுறவு இணையதள தலைவர் சக்திவேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு, வீடு கட்டும் பணி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், நகரசபை பகுதிகளில் வீடு கட்டும் பணி அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அதிகமாக நடைபெறுகிறது. இந்த இரு நகரசபைகளிலும் ரூ.100 கோடி மதிப்பில் சுமார் 3 ஆயிரம் பயனாளிகள் பணிகள் செய்கின்றனர். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதே போல் வாகைகுளம் பகுதியில் வீடு இல்லாத ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வர உள்ளது. மேலும் மணிமுத்தாறு– மாஞ்சோலை செல்லும் சாலை ரூ.2 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய நிர்வாக என்ஜினீயர் ஜெயசெல்வன், உதவி நிர்வாக என்ஜினீயர் சுப்புராஜ், தாசில்தார் சொர்ணம், ஆணையாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, நகர செயலாளர்கள் அறிவழகன், கண்ணன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பிராங்களின், விஜய பாலாஜி, சங்கரலிங்கம், இளைஞர் பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story