நெல்லையில் வாடகை கார் டிரைவர், உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்யகோரிக்கை


நெல்லையில் வாடகை கார் டிரைவர், உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்யகோரிக்கை
x
தினத்தந்தி 18 April 2018 2:30 AM IST (Updated: 17 April 2018 8:28 PM IST)
t-max-icont-min-icon

சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையில் வாடகை கார் டிரைவர், உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை, 

சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையில் வாடகை கார் டிரைவர், உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம் 

அனைத்து வாடகை கார் உரிமையாளர்கள், டிரைவர்கள், ஒர்க்ஷாப் உரிமையாளர்கள், ஸ்பேர் பார்ட்ஸ் உரிமையாளர்கள் இணைந்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வாடகை வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் நல முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சந்தோ‌ஷம் தலைமை தாங்கினார். பொது செயலாளர் செந்தில்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். தினமும் டீசல், பெட்ரோல் விலை ஏறுவதை நிறுத்த வேண்டும். ஒர்க்ஷாப், ஸ்பேர் பார்ட்ஸ் ஊழியர்களுக்கு விதிக்கப்படும் சரக்கு சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். வாடகை வாகனத்திற்கான இன்சூரன்சு குறைக்கப்பட வேண்டும். ஊட்டி, கூடலூர் பகுதிகளில் அணைகட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோ‌ஷங்கள் 

ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநில துணை தலைவர்கள் பால்துரை, பிரின்ஸ், துணை பொது செயலாளர்கள் அழகுவேல், முருகபாவேந்தர், பொருளாளர் எப்ராயீம், நிர்வாகிகள் பாபு, செல்வம், ராஜகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

Next Story