சங்கரன்கோவில் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் 30–வது நாளாக வேலை நிறுத்தம் ரூ.1½ கோடி துணி உற்பத்தி பாதிப்பு

சங்கரன்கோவில் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் 30–வது நாளாக வேலை நிறுத்தம் ரூ.1½ கோடி துணி உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 18 April 2018 2:00 AM IST (Updated: 17 April 2018 8:48 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் 30–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.1½ கோடிக்கு துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் 30–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.1½ கோடிக்கு துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது சுப்புலாபுரம் கிராமம். இங்கு 100–க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 1000–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி செய்யப்படுகிறது.  

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும். விடுமுறை சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.300 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி நெல்லை, மதுரை ஆகிய தொழிலாளர் நல அலுவலகத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் நேற்று 30–வது நாளாக நீடித்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என்று விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

துணி உற்பத்தி பாதிப்பு

விசைத்தறி தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக இதுவரை ரூ.1½ கோடிக்கு துணி உற்பத்தி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story