தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 9–ம் வகுப்பு மாணவன் பலி
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 9–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான். அவனுடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.
தக்கலை,
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் பகுதியை சேர்ந்தவர் அகமது கபீர். இவரது மகன் சாதிக் (வயது 16). தக்கலை அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் சாதிக் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் குளச்சலுக்கு சென்றான். மாலையில் இருவரும் குளச்சலில் இருந்து அழகியமண்டபத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு அருகே வந்த போது, சாலையில் வேகத்தடை இருப்பதை கவனிக்காமல் வேகமாக வந்ததாக தெரிகிறது. இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி, இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
பரிதாப சாவு
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாதிக் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் சிகிச்சை பலனின்றி நேற்று சாதிக் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story