நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 April 2018 3:30 AM IST (Updated: 18 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம்,

காஷ்மீர் சிறுமி ஆசிபாவை கற்பழித்து கொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய–மாநில அரசுகளை வலியுறுத்தி ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மீனவரணி செயலாளர் டோமினிக் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாணவரணி செயலாளர் பிரேம், நகர் செயலாளர் குட்டிமணி, கண்.இளங்கோ, வியூமன், முரளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story