அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு எதிர்ப்பு : திருத்தங்கல் மாரியம்மன் கோவிலில் உள்ளிருப்பு போராட்டம்
அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்தங்கல் மாரியம்மன் கோவிலில் 8 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
சிவகாசி–விருதுநகர் மெயின் ரோட்டில் திருத்தங்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. 130 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோவிலை அதே பகுதியில் வசித்து வரும் 8 சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பராமரித்து வந்தனர். திருவிழாக்களை இந்த 8 சமுதாய மக்கள் முன்நின்று நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கோவிலில் முறைகேடு நடப்பதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தலைமையில் கோவில் வரவு–செலவு கணக்குகளை கண்காணிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து இந்து அறநிலையத்துறை சார்பில் உதவி ஆணையாளர் ஹரிஹரனை கோவில் செலவுகளை கண்காணிக்க அரசு நியமித்தது. அவர் தொடர்ந்து 3 மாதம் மாரியம்மன் கோவிலை கண்காணித்து உரிய அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த நிலையில் மாரியம்மன் கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தப்போவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் பரவியது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 சமுதாய மக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை கூறினர்.
இந்த நிலையில் நேற்று காலை 8 சமுதாய மக்களும் கோவிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி அம்மனிடம் மனு கொடுக்க இருப்பதாக தகவல் பரவியது. இதை தொடர்ந்து கோவில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது 8 சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோவிலின் உள்ளே அமர்ந்து கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணிக்கு முடிந்தது. அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story