நீராபானம் இறக்க கட்டிய பானைகளை உடைத்ததால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
நீராபானம் இறக்க தென்னை மரத்தில் கட்டி இருந்த பானைகளை போலீசார் உடைத்ததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கோவை,
கோவையை அடுத்த குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூணன் (வயது 44). இவர் அங்குள்ள ஒரு தோட்டத்தில் தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் இறக்கி உள்ளார். இந்த நிலை யில் நேற்று காலை அந்த தோட்டத்துக்கு சென்ற மதுவிலக்கு போலீசார் தென்னை மரத்தில் கட்டப் பட்டிருந்த பானைகளை உடைத்துள்ளனர். மேலும் தென்னம்பாளைகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், போலீசாரை கண்டித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் ஏ.எஸ்.பாபு ஆகியோர் தலைமையில் கோவை புலியகுளத்தில் உள்ள மதுவிலக்கு போலீஸ் நிலையத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், போலீசாரால் உடைக்கப்பட்ட பானைகள் மற்றும் சேதமடைந்த தென்னம் பாளைகளை கொண்டு வந்து இருந்தனர்.
முற்றுகையிட்ட விவசாயிகளுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கூறியதாவது:-
தமிழக அரசு நீரா பானம் இறக்க அனுமதி அளித்து உள்ளது. அதன்படி தான் விவசாயி அர்ஜூணன் நீரா பானம் இறக்கியுள்ளார். ஆனால் மதுவிலக்கு போலீசார் தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்த பானைகளை உடைத்தும், பாளைகளை வெட்டியும் சேதப்படுத்தி உள்ளனர். அதோடு விவசாயியை மிரட்டியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அவர் தவறு செய்து இருந்தால் வழக்கு போட்டு இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story