100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள், மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.
போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அபிமன்னன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சவுந்தர்ராஜன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 100 நாள் வேலை திட்டத்தை சீர் குலைக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். வேலைகோரும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 4 மாத சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். சட்டக்கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும். வேலைக்கேட்டு மனு கொடுத்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் துரை, சூரியநாராயணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். காலை 11 மணியில் இருந்து மதியம் 1.15 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடந்தது.

Related Tags :
Next Story