பெண்ணை தாக்கி 8 பவுன் தங்க சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு


பெண்ணை தாக்கி 8 பவுன் தங்க சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 April 2018 3:45 AM IST (Updated: 18 April 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

ஆவுடையார்கோவில் அருகே பெண்ணை தாக்கி 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள காரணியானேந்தலை சேர்ந்தவர் குத்புதீன். இவர் தற்போது தனது மகன் சலீமுடன் காத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெய்லாபீவி (வயது 45). இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெய்லாபீவி தனது குடும்பத்தினருடன் வீட்டின் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணிக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் பீரோ இருந்த அறையில் இருந்து சப்தம் கேட்டுள்ளது. இதனால் தூங்கி கொண்டிருந்த ஜெய்லாபீவி அந்த அறைக்கு சென்று பார்த்துள்ளார்.

நகை-பணம் திருட்டு

அப்போது அங்கு ஒரு மர்மநபர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.6 ஆயிரத்தை திருடி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெய்லாபீவி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மற்றவர்கள் எழுந்து வந்தனர். அதற்குள் சுதாரித்து கொண்ட அந்த மர்மநபர், ஜெய்லாபீவியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து ஜெய்லாபீவி ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பவுன் தங்க சங்கிலி, ரூ.6 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story