சட்டசபை தேர்தல்: கர்நாடகத்தில் முதல் நாளில் 30 பேர் வேட்புமனு தாக்கல்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் முதல் நாளில் 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று காலை 11 மணிக்கு மாநிலம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மதியம் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. பெங்களூருவில் 28 தொகுதிகள் உள்ளன. அந்தந்த தொகுதிகளில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு சாந்திநகர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் ரேணுகா விஸ்வநாதன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் அந்தோணி சந்தோஷ் என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். கே.ஆர்.புரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கோபால்கவுடாவும், கோவிந்தராஜ்நகரில் சுயேச்சையாகவும், ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பிலும் உமாசங்கர் என்பவர் 2 மனுக்களை தாக்கல் செய்தார். மேலும் விஜயநகர் தொகுதியில் கருநாடு கட்சி சார்பில் புத்யா என்பவரும், பொம்மனஹள்ளி தொகுதியில் அனில்குமார் சுயேச்சையாகவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முதல் நாளில் பெங்களூருவில் 6 பேர் உள்பட மாநிலம் முழுவதும் 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை தேர்தல் அதிகாரிகள் விதித்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்களுடன் ஆதரவாளர்கள் 5 பேர் மட்டுமே தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு வேட்பாளருடன் 3 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். மனு தாக்கல் செய்பவர்கள் வேறு தொகுதிகளில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தால் அத்தகையவர்கள் 2 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விவரமாக தெரிவிக்க வேண்டியது கட்டாயம். ஏதாவது தகவல்களை நிரப்பாமல் விட்டால், அத்தகைய மனுக்கள் நிராகரிக்கப்படும். வேட்பாளர்கள் புதிய வங்கி கணக்குகளை தொடங்கி, அதில் இருந்து மட்டுமே பணத்தை எடுத்து தேர்தல் பிரசார செலவுகளை செய்ய வேண்டும்.

Related Tags :
Next Story