வளர்ச்சி பணிகள் விவகாரத்தில் முதல்-மந்திரி அடிக்கும் முரசில் சத்தம் வரவில்லை
வளர்ச்சி பணிகள் விவகாரத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அடிக்கும் முரசில் சத்தம் வரவில்லை என்று சிவசேனா விமர்சித்து உள்ளது.
மும்பை,
ஆளும் பா.ஜனதா கூட்டணியில் சிவசேனா அங்கம் வகித்தாலும் அக்கட்சி தொடர்ந்து அரசையும், பா.ஜனதா கட்சி தலைமையையும் வசைபாடி வருகிறது.
சமீபத்தில் தனது தலைமையிலான மராட்டிய பா.ஜனதா ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியிருந்தார். இதை தாக்கி சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று தலையங்கம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் கூறியிருப்பதாவது:-
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தங்களின் ஆட்சி காலத்தில் வேளாண் உற்பத்தி அதிகரித்திருப்பதாகவும், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் மிகச்சிறந்த முறையில் அமல் படுத்தப்பட்டிருப்பதாகவும் வளர்ச்சி திட்டங்கள் என்ற ெபயரில் தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறார்.
அவர் தொடர்ந்து இந்த முரசை முழுங்கி கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அதில் இருந்து சத்தமே வரவில்லை என்பது தான் உண்மை. (வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசு கூறியபோதிலும், அதன் பயன் மக்களை சென்றடையவில்லை என்பது இவ்வாறு விமர்சிக்கப்பட்டு உள்ளது).
தற்போது உருளைக்கிழங்கு, வெங்காயம், கரும்பு போன்ற வேளாண் விளைபொருட்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. முதல்-மந்திரி தற்பெருமை பேசுவதை விட்டுவிட்டு இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தவேண்டும்.
மேலும் அவுரங்காபாத்தில் விவசாயி ஒருவர் தன் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததால், அதை தனது கால்நடைகளுக்கு தீவனமாக்கியுள்ளார்.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைக்காத நிலையில் விவசாயி அதற்காக செய்த முதலீட்டை எவ்வாறு மீட்டெடுக்க முடியும். விளைபொருட்களை கால்நடைகளுக்கு விருந்தாக்குவதை தவிர அவரிடம் வேறு வழி உள்ளதா?.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story