ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தாமிரபரணி நதிநீர் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம்


ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தாமிரபரணி நதிநீர் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 19 April 2018 2:00 AM IST (Updated: 18 April 2018 9:09 PM IST)
t-max-icont-min-icon

ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரபரணி நதிநீர் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம், 

ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரபரணி நதிநீர் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைப்பு கூட்டம்

நெல்லை மாவட்ட ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் சார்பில் தாமிரபரணி நதிநீர் பாராளுமன்ற அமைப்பு கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் வையாபுரி, கீழ்பவானி விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி, அகில இந்திய காந்திய இயக்க தலைவர் விவேகானந்தன், கோதை செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள காடுகள் அழிவதை தடுக்க வேண்டும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தோட்டங்களை உருவாக்கக்கூடாது. தோட்டங்கள் உருவாக்கி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க வேண்டும். ஆற்று நீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.

பாதுகாக்க வேண்டும்

ஆறுகளில் நடந்து வரும் மணல் திருட்டை தடுக்க வேண்டும். சமூக ஆர்வலர்களை நியமித்து ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் மதிவாணன், அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், செல்லமுத்து, சலீம், ராம்மோகன், கோவிந்தன், காஜாமைதீன், துரைச்சாமி, திருச்செல்வன், செல்லக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story