போதை சாக்லெட் விற்பனையா? அதிகாரிகள் சோதனை
தேனியில் உள்ள கடைகளில் போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுகிறதா என்று அதிகாரிகள் சோதனை.
தேனி,
தேனி பகுதியில் உள்ள கடைகளில் போதை சாக்லெட் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறைக்கும், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கும் புகார்கள் சென்றன. அதன்பேரில், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகுணா ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் தேனி பகுதியில் உள்ள மிட்டாய் கடைகள், மொத்த வியாபார கடைகளில் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது கடைகளில் போதை சாக்லெட் எதுவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர். ஆனால், போதை சாக்லெட் எதுவும் சிக்கவில்லை. அதே நேரத்தில் அதிக நிறமூட்டப்பட்ட மிட்டாய்கள், காலாவதியான மிட்டாய்கள், தயாரிப்பு தேதி இல்லாத மிட்டாய் பாக்கெட்டுகள் என சுமார் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மிட்டாய் பொருட்களை அவர்கள் கைப்பற்றினர். இந்த சோதனையில் தேனி உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story