மதுரை எல்லீஸ்நகர் பாலத்தின் கீழ் தொடரும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள், பொதுமக்கள் அச்சம்


மதுரை எல்லீஸ்நகர் பாலத்தின் கீழ் தொடரும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள், பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 19 April 2018 3:45 AM IST (Updated: 19 April 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

மதுரை எல்லீஸ்நகர் பாலத்தின் கீழ் தொடரும் குற்றச்சம்பவங்களால் பொதுமக்ககள் அச்சமடைந்துள்ளனர்.

மதுரை,

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து எல்லீஸ்நகர் மற்றும் அரசரடி பகுதிக்கு செல்ல ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாலத்தில் மேலே நடந்து செல்ல முடியாது என்பதால், பாலத்தின் கீழ்பகுதி வழியாக கடந்து சென்று வருவது வழக்கம்.

பஸ் நிலையத்தில் இருந்து பாலத்தின் கீழ் தனியாக செல்பவர்களை குறி வைத்து ஒரு கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அந்த கும்பல் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம் செல்போனை பறித்துவிட்டு அவரை குத்திக்கொலை செய்தது.

தினமும் பாலத்தின் கீழே போலீசார் ரோந்து பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் ரோந்து வரும் போது அந்த கும்பல் எவ்வித அசம்பாவித செயல்களிலும் ஈடுபடாது. அவர்கள் சென்ற பிறகு அந்த கும்பல் செல்போன், நகைபறிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு பாலத்தின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் இரவு 11.30 மணியளவில் திருடி சென்று விட்டனர். மர்ம நபர்கள் வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சென்ற பிறகு வந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

சம்பவம் குறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் எல்லீஸ்நகர் பாலத்தின் கீழ் செல்ல பெரிதும் அச்சப்படும்நிலை உருவாகி உள்ளது.

Next Story