கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக, கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கவர்னருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றதில் இருந்து சூப்பர் முதல்-அமைச்சராக செயல்பட்டு வருகிறார். மாவட்டங்களில் தன்னிச்சையாக அவர் நடத்தி வரும் ஆய்வும், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதை எதிர்த்தும் ஏற்கனவே எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.
ஆனால், கவர்னர் எதையும் கண்டுகொள்ளாமல் சர்வாதிகார போக்கில் செயல்பட்டு, பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசின் ஆலோசனை இல்லாமல் நியமிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை கவர்னர் கைவிட வேண்டும்.
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது. அதில், உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? என்பதை முறையாக விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.
கவர்னர் மாளிகையில் நேற்று (நேற்று முன்தினம்) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டி அநாகரீகமான முறையில் கவர்னர் நடந்து கொண்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
தொடர்ந்து தமிழக உரிமைகளை சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜாவும் தரம் தாழ்ந்து கருத்து பதிவிடுவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் வேல்முருகன் தலைமையில் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அனைவரும் சி.ஐ.டி. நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story