பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: கவர்னர் தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படுகிறார் - எச்.ராஜா பேட்டி
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்பட்டு உள்ளார் என எச்.ராஜா தெரிவித்தார்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே உள்ள பாப்பான்சத்திரம் பகுதியில் பராமரிப்பு இன்றி இருக்கும் காசிவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நேற்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் கோவிலை சுற்றிலும் சென்று பார்த்து ஆய்வு செய்தார்.
அதன்பிறகு எச்.ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-
அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறையினரின் கூட்டு சதியால் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள் குறித்து ஆதாரங்களுடன் வெளியிட்டும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறையால் நிர்வாகிக்க முடியவில்லை என்றால் அதனை விட்டுச்செல்ல வேண்டும்.
தமிழகத்தில் கோவில்களுக்கென 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 33 ஆயிரம் கட்டிடம், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனைகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்களை முறையாக பராமரித்தாலே ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். அதன் மூலம் இலவச மருத்துவம், இலவச கல்வி வழங்கலாம்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்பட்டு உள்ளார். பல்கலைக்கழக நிர்வாகத்தில் தலையிட மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. கவர்னர் தனது பணியை செய்கிறார்.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடும், கர்நாடகாவும் ஒன்றுதான். தமிழகத்துக்கு, மத்திய அரசு உதவ விரும்புகிறது. ஆனால் நதிகள் மாநில பட்டியலில் இருப்பதால் உதவுவதில் முட்டுக்கட்டை இருக்கிறது.
கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்து உள்ளதை கண்டிக்கிறேன். சட்டம் தெளிவாக உள்ளது. கோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்யமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story