காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இணையதள நண்பர்கள் அமைப்பின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே இணையதள நண்பர்கள் அமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.
போராட்டத்துக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். குழந்தைகள் நல மருத்துவர் ராஜா, போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் இணையதள நண்பர்கள் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகர், வீரராகவன், செயலாளர்கள் மணிகண்டன், குருமூர்த்தி, பாலாஜி, நகராட்சி ஒப்பந்தகாரர் பசுபதி ஆகியோர் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story