அக்னி தீர்த்த கடற்கரை சாலையை சீரமைக்காததால் நெடுஞ்சாலை துறையினர் மீது இந்துமக்கள் கட்சியினர் போலீசில் புகார்
அக்னி தீர்த்த கடற்கரை சாலையை உடனே சீரமைக்காததால் நெடுஞ்சாலை துறையினர் மீது இந்து மக்கள் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் கோவில் கீழ ரதவீதியில் இருந்து அக்னி தீர்த்த கடற்கரை வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த சாலையை அகற்றி விட்டு அலங்கார கற்கள் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு பணிகளை தொடங்கினர். இதற்காக ஜே.சி.பி. எந்திரம் மூலம் தார்ச்சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு பணிகள் மேற்கொள்ளப்படாததால் அந்த சாலை தற்போது கற்களாக காட்சி அளிக்கிறது. அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து கோவிலுக்கு வரும் பிரதான சாலையாக இருப்பதால் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு அந்த வழியாக வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து சாலை பணிகளை மேற்கொண்டு உடனே சீரமைக்காததால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும் நெடுஞ்சாலைத்துறையினர் மீது இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் குருசர்மா, நளபதி, நம்பு கார்த்திக், காளி உள்பட கட்சி நிர்வாகிகள் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்பு அவர்கள் அந்த சாலையில் பக்தர்களுக்கு இடையூறாக கிடக்கும் சிறு சிறு கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story