காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அனைத்து கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில், அனைத்து கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெந்தகோஸ்து திருச் சபைகளின் மாமன்றம் அமைப்பின் நாகை மாவட்ட தலைவர் நஸாரியூஸ் தலைமை தாங்கினார். தி.மு.க. ஆதிதிராவிடர் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் இமானுவேல்காந்தி, மனிதநேய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., தி.மு.க. தேர்தல் பணி குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், கொள்கை பரப்பு மாநில துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் இணை செயலாளர் இமானுவேல் வரவேற்றார்.
காவிரி மேலாண்மை வாரியம்
ஆர்ப்பாட்டத்தின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், இந்தியாவிலும், தமிழகத்திலும் தேவாலயங்கள், போதகர்கள் மற்றும் சிறுபான்மையினரின் நிறுவனங்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாமஸ் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த டி.இ.எல்.சி. அமைப்பின் போதகர்கள், அரசியல் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story