வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது கலெக்டர் அன்பழகன் தகவல்
வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்ட அரசு ரூ.12 ஆயிரம் வழங்குகிறது என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சி அருகே விஸ்வநாதபுரி ஊராட்சியில் கிராம சுயாட்சி இயக்கத்தின் தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசியதாவது:–
திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுத்திட வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள், பொதுமக்கள் சுத்தமான துவைத்த ஆடைகளை அணிந்திட வேண்டும். சோப்பு தேய்த்து குளித்தும், நகங்களை வெட்டி சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். மலம் கழிக்க கழிப்பறையை மட்டும் பயன்படுத்த வேண்டும். மலம் கழித்த பிறகு கைகளை சோப்பினால் கழுவி சுத்தம் செய்திட வேண்டும்.
தனிநபர் கழிப்பறை
திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பல்வேறு தொற்று நோய்கள் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. இந்த நிலையை போக்கிட சுகாதாரமான தமிழகத்தை உருவாக்கிட அனைத்து இல்லங்களிலும் தனிநபர் கழிப்பறையை கட்டிட வேண்டும். இதற்காக அரசு ரூ.12 ஆயிரம் வழங்குகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கழிப்பறையை கட்டி அதை பயன்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் செம்மலர் கலைக்குழு மற்றும் பேண்டு வாத்திய குழுக்கள் மூலம் பாடல்கள், குழு நாடகம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் வாயிலாக திறந்தவெளியில் மலம் கழிப்பதன் விளைவுகள் குறித்து வீதி, வீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. மேலும் சுகாதார உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, உதவி கலெக்டர்கள் பாலசுப்பரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருஞானசம்பந்தம், கிறிஸ்டி, தாசில்தார் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story