தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் காட்டு யானைகள் ஆனந்த குளியல்
தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானைகள் ஏரியில் ஆனந்த குளியல் போட்டன.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் வனப்பகுதியில் யானைகள், காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் அடிக்க வருகின்றன.
இந்த நிலையில் நேற்று பெட்டமுகிலாளம் கிராமத்தை ஒட்டியுள்ள சாம ஏரிக்கு 3 காட்டு யானைகள் வந்தன. பின்னர் அவைகள் ஏரிக்குள் இறங்கி சிறிது நேரம் ஆனந்த குளியல் போட்டன. அப்போது யானைகள் ஒன்றன் மேல் ஒன்று தண்ணீரை பீய்ச்சியடித்து விளையாடின. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சாம ஏரிக்கு திரண்டு வந்தனர்.
நீர் நிரப்பும் பணிகள்
அங்கு அவர்கள் ஏரியில் யானைகள் உற்சாகமாக குளிப்பதை கண்டு ரசித்தனர். மேலும் இளைஞர்கள், காட்டு யானைகள் ஆனந்த குளியல் போட்டதை தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். இதைத் தொடர்ந்து யானைகள் ஏரியை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்று விட்டன.
யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதிகளில் உள்ள கசிவுநீர் குட்டையிலும், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளிலும் நீர் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story