பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2018 4:30 AM IST (Updated: 19 April 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நாகையில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் மோகன், நாத்திகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் அண்ணாதுரை வரவேற்றார். இதில் மாநில செயலாளர் சுகுமார், மாநில துணை தலைவர் வின்சென்ட் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 மற்றும் அரசு ஊழியர்கள் பெறும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.

பழைய ஓய்வூதியம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அலுவலக உதவியாளருக்கான பதவி உயர்வு 10 சதவீதம் என்ற அரசாணையை 50 சதவீதமாக மாற்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன்சேரல், மாவட்ட செயலாளர் அன்பழகன், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன், கீழ்வேளூர் வட்ட தலைவர் கார்த்திகேயன், தரங்கம்பாடி வட்ட தலைவர் சண்முகசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார். 

Next Story