அட்சய திருதியையொட்டி ஒரே நாளில் ரூ.40 கோடி தங்க நகைகள் விற்பனை
திண்டுக்கல் மாவட்டத்தில், அட்சய திருதியையொட்டி ஒரே நாளில் ரூ.40 கோடி தங்க நகைகள் விற்பனையானது.
திண்டுக்கல்,
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதனால், பெரும்பாலானோர் தங்கம் வாங்குவதற்காக அட்சய திருதியை நாளை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்தநிலையில், நேற்று அட்சய திருதியை நாள் என்பதால் காலை 7 மணிக்கே நகைக்கடைகள் திறக்கப்பட்டன.
கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.2,757-க்கு விற்பனை ஆனது. நேற்று ஒரு கிராம் ரூ.2,992-க்கு விற்கப்பட்டது. பல்வேறு கடைகளில் வாடிக்கையாளர்களை கவர்வதற் காக புதிய டிசைன்களில் நகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், சில கடைகள் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை அறிவித்திருந்தன.
இதனால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. வாடிக்கையாளர்கள் பொறுமையாக அமர்ந்து பார்த்து, பார்த்து நகைகளை வாங்கி சென்றனர். இதுகுறித்து நகைக் கடை அதிபர் ஒருவரிடம் கேட்டபோது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தங்கநகை விற்பனை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 200 நகைக்கடைகள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.30 கோடி மதிப்பிலான தங்க நகைகள் விற்பனை ஆனது. ஆனால், நேற்று சுமார் ரூ.40 கோடி வரை நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story