சாலையோர தடுப்பு சுவர் இடிந்து லாரி கவிழ்ந்தது டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்
கோத்தகிரி அருகே மலைப்பாதையில் சாலையோர தடுப்பு சுவர் இடிந்து லாரி கவிழ்ந்து டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே மலைப்பாதையில் சாலையோர தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோத்தகிரி அருகே உள்ள பர்ன்சைடு கிராமத்துக்கு நேற்று காலை எரு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. லாரியை கோத்தகிரி அருகே உள்ள பாண்டியராஜ் நகர் பகுதியை சேர்ந்த அசோக் குமார் (வயது 37) என்பவர் ஓட்டி சென்றார். கிளனராக வேல்குமார் (48) என்பவர் உடன் இருந்தார்.
பர்ன்சைடு கிராமம் அருகே டீப்டேல் பகுதியில் மலைப்பாதையில் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரி அங்குள்ள ஒரு விளைவில் திரும்புவதற்காக சாலையோரம் மெதுவாக சென்றது. தற்போது அந்த பகுதியில் மழை பெய்து இருந்ததால் மலைப்பாதை ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரில் ஈரத்தன்மை இருந்தது.
இந்த நிலையில் லாரியின் பாரம் தாங்காமல் சாலையோர தடுப்பு சுவர் திடீர் என்று இடிந்தது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் லாரி அங்கு பள்ளத்தில் இருந்த சாலையில் தலை கீழாக கவிழ்ந்தது.
இதில் டிரைவர் அசோக் குமார், வேல்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அசோக் குமார் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதை தொடர்ந்து லாரி அங்கிருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கவுதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story