தமிழகத்தில் ஒரே ஆண்டில் 70 புதிய தாலுகா, 10 வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது


தமிழகத்தில் ஒரே ஆண்டில் 70 புதிய தாலுகா, 10 வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 19 April 2018 4:00 AM IST (Updated: 19 April 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 70 புதிய தாலுகா, 10 வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் கூறினார்.

ஆரணி, 

ஆரணி வருவாய் கோட்டமாக உருவாக்கப்பட்டமைக்கும், ஜமுனாமரத்தூர் புதிய தாலுகாவாக ஆரம்பித்தமைக்கும் ஆரணியில் முதல் - அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு ஆரணி பயணியர் விடுதிக்கு வந்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல் - அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடந்தபோது முதல் - அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒவ்வொரு மாவட்டத்தின் நீண்டநாள் கோரிக்கைகளாக இருந்து வந்த புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் 70 புதிய தாலுகா அலுவலகங்களும், 10 வருவாய் கோட்ட அலுவலகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு நாள் கூட ஆட்சியை தாக்குப்பிடிக்க முடியாது என்று கூறி வந்தவர்களுக்கு இடையே ஒரே ஆண்டில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்டம், ஜமுனாமரத்தூர் புதிய தாலுகா உருவாவதற்கும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், வி.பன்னீர்செல்வம், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன் ஆகியோரின் ஒத்துழைப்பாலும் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story