கோடை சீசனையொட்டி ஊட்டியில் போலீசாருக்கு பயிற்சி
கோடை சீசனையொட்டி ஊட்டியில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊட்டி,
கோடை சீசனையொட்டி நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்களிடம் நடந்து கொள்வது எப்படி என்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் களை கட்ட தொடங்கி உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான ஊட்டிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இன்னும் சில நாட்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது.
அதன் காரணமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்திலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கு சுற்றுலா பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்து பேசியதாவது:-
நீலகிரிக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகளிடம் போலீசார் புன்சிரிப்புடன் அமைதியாக, அன்பாக பேசி அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்கள் கொண்டு வரும் உடைமைகளை போலீசார் கவனித்துக்கொள்வது அவசியம். அப்போது தான் யாராவது உடைமைகளை திருடினால் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க முடியும். மலைப்பகுதியில் பாதுகாப்பின்றி வாகனங்களை இயக்கினால் ஏற்படும் விபத்துகளை சுற்றுலா தலங்களுக்கு வரும் வாகன ஓட்டுனர்களிடம் எடுத்து கூறுவது முக்கியம்.
ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுக்கக்கூடாது, அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என்று ஆபத்தை உணர்த்தும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும். யாரேனும் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டால் போலீசாரே முதலுதவி அளித்து சம்பந்தப்பட்ட மருத்துவ உதவி மையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக கவனித்துக்கொள்ளும் படி அவ்வப்போது போலீசார் தெரிவிக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பதையும் சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும். சுற்றுலா தலங்கள் எங்கே இருக்கிறது என்று வழிகாட்ட வேண்டும்.சுற்றுலா தலங்களில் ‘உங்களுக்கு நான் உதவலாமா’ என்ற போலீஸ் உதவி மையம் அமைக்கப்படுகிறது. அங்கு பணிபுரியும் போலீசார் வாக்கி டாக்கியுடன் மாலை வரை பணிபுரிவார்கள். புகார்கள் ஏதேனும் இருந்தால் இந்த மையத்தின் மூலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். தமிழகத்திலேயே முதல் முறையாக அமைக்கப்படும் முன்மாதிரி சுற்றுலா போலீசாரின் பணிகள் காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் போலீசார் பணிபுரிய வேண்டும்.
சுற்றுலா தலங்களில் பணிபுரியும் சுற்றுலா போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்கள் தங்களை அடையாளப்படுத்தும் வகையில் இளஞ்சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்திருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் தலா 2 முதல் 3 சுற்றுலா போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள். தற்போது கோடை சீசனையொட்டி சுற்றுலா போலீசார் 240 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். பயிற்சியின் போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின்நோஸ், கோடநாடு காட்சி முனை, பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திரையிடப்பட்டன. இந்த பயிற்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி மற்றும் நீலகிரி ஆவணக்காப்பக இயக்குனர் வேணுகோபால் சுற்றுலா போலீசார் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story