100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில்
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பாக மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். இதுதவிர இரவில் புழுக்கமும் அதிகமாக உள்ளது.
கடந்த 3 நாட்களாக சேலம் மாவட்டத்தில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. அதாவது, கடந்த 16-ந் தேதி 100 டிகிரியும், நேற்று முன்தினம் 100.4 டிகிரியும், நேற்று 100.2 டிகிரியும் பதிவாகி உள்ளன. கடந்த 15-ந் தேதி லேசாக கோடை மழை பெய்ததால் வெப்பம் ஓரளவு தணிந்தது.
வெயிலையொட்டி சாலையோரங்களில் ஆங்காங்கே தற்காலிக ஜூஸ் கடைகள் பல தொடங்கி உள்ளன. இந்த கடைகளில் தற்போது பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வெயிலினால் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று போக்கு, உடலில் சிறிய கொப்புளங்கள் ஏற்பட்டு வருகின்றன.
வெயிலின் தாக்கம் குறித்து சேலம் வானிலை அதிகாரிகள் கூறும் போது, ‘மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளது. குறைய வாய்ப்பிருக்காது. அக்னி வெயில் காலத்தில் 105 டிகிரி தாண்டியும் வெயிலின் தாக்கம் இருக்கலாம். வானிலையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது‘ என்றார்.
Related Tags :
Next Story