காட்பாடி திருமணி பாலாற்றிலிருந்து போலி ரசீது வழங்கி பல யூனிட் மணல் கடத்தல்
காட்பாடி திருமணி பாலாற்றிலிருந்து மாட்டு வண்டிகளுக்கு போலி ரசீது வழங்கி பல யூனிட் அளவுக்கு மணல் கடத்தியது தொடர்பாக 3 பேரிடம் தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்.
காட்பாடி,
காட்பாடி அருகே உள்ள திருமணி பாலாற்றில் இருந்து தினமும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்வதாக தாசில்தார் ஜெயந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் செந்தாமரை, 6 கிராம நிர்வாக அலுவலர்கள், 10 கிராம உதவியாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலையில் திருமணி பாலாற்றுக்கு சென்றனர்.
அங்கு 300-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருப்பதும், சில மாட்டு வண்டிகள் மணல் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு செல்வதும் தெரிய வந்தது.
மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது மாட்டு வண்டி உரிமையாளர்கள், தாங்கள் முறையாக பணம் செலுத்தி மணல் அள்ளி செல்வதாக தெரிவித்தனர். மேலும் தாங்கள் வைத்திருந்த ரசீது ஒன்றை காண்பித்தனர். அதனை பார்வையிட்ட வருவாய் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதையடுத்து இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தகவல்கள் கேட்டனர். அப்போது பொதுப்பணித்துறையினர் ‘திருமணி பாலாற்றில் மணல் அள்ள யாருக்கும் அனுமதி கிடையாது. பொய்கை கொத்தமங்கலம் பாலாற்றில் மட்டுமே மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி அளித்து இருந்தோம். ஆனால், கடந்த 10-ந் தேதியுடன் அதற்கான அனுமதியும் முடிவடைந்து விட்டது’ என்று தெரிவித்தனர்.
அதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த ரசீது வழங்கியவர்கள் யார்? என விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், ஹரிதாஸ், ராஜேஸ் ஆகியோர் போலியாக ரசீது வழங்கி மாட்டு வண்டி உரிமையாளர்களிடம் பணம் வசூலித்து வந்ததும், கடந்த 11-ந் தேதி முதல் பொய்கை கொத்தமங்கலம் பாலாற்றில் இருந்து பல யூனிட் மணல் போலி ரசீது மூலம் அள்ளியதும், மேலும் இதற்காக அவர்கள் ஒரே வரிசை எண் கொண்ட ரசீது புத்தகங்களை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக காட்பாடி தாசில்தார் ஜெயந்தி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள், நாங்கள் பொதுப்பணித்துறையினரிடம் அனுமதி பெற்றுத்தான் மாட்டு வண்டிகளுக்கு பணம் வசூல் செய்து ரசீது வழங்குகிறோம் என்றனர்.
ஆனால் ஒரே வரிசை எண் கொண்ட ரசீது புத்தங்கள் வைத்திருந்தது குறித்தும், மணல் அள்ள அனுமதி பெற்றது குறித்தும் தாசில்தார் ஜெயந்தி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
காட்பாடி அருகே போலி ரசீது வழங்கி பல யூனிட் மணல் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story